×

எல்ஐசிபுதிய பாலிசி அறிமுக விழா

குளித்தலை, மார்ச் 3: குளித்தலை எல்ஐசி கிளை அலுவலகத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட எல்ஐசி நிவேஷ் பிளஸ் எஸ் .ஐ .ஐ.பி என்ற பங்குச் சந்தை சார்ந்த இரண்டு பாலிசிகள் அறிமுக விழா நடைபெற்றது. குளித்தலை எல்ஐசி கிளை மேலாளர் ஜெயபாலன் தலைமை வகித்தார். தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கிளை மேலாளர் பாண்டியராஜன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார். உதவி கிளை மேலாளர் மணிவண்ணன் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பங்குச் சந்தை சார்ந்த பாலிசி குறித்து விளக்கம் அளித்து பேசினார். நிகழ்ச்சியில் எல்ஐசி வளர்ச்சி அதிகாரிகள், அலுவலர்கள், முகவர்கள் கலந்து கொண்டனர்.

Tags : LIC ,
× RELATED புதிய வயவந்தனா திட்டம்: எல்ஐசி அறிவிப்பு: மாத பென்ஷன் 9,250