×

கீழையூர் பகுதி கடற்கரை கிராமங்களில் கடலை பயிர் சாகுபடி இழப்புக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்

நாகை, மார்ச் 3: கீழையூர் பகுதி கடற்கரை கிராமங்களில் கடலை பயிர் சாகுபடி இழப்புக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு கொடுத்தனர். நாகை கலெக்டர் அலுவலகத்தி–்ல் நேற்று பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் டிஆர்ஓ இந்துமதி தலைமையில் நடந்தது. கீழையூர் அருகே கடற்கரை கிராமங்களான வேட்டைக்காரனிருப்பு, புதுப்பள்ளி, விழுந்தமாவடி, காமேஸ்வரம், பூவைத்தேடி ஆகிய கிராமங்களில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு சாகுபடி செய்த நிலக்கடலை பயிர்கள் அறுவடை நேரத்தில் பொய்த்து போய் விட்டது. அறுவடை செய்து பார்த்தால் நிலக்கடலை இல்லாமல் வெறும் கூடாக இருக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

தனியார் தொண்டு நிறுவனம் வாயிலாக ஏழைகளுக்கு வழங்கப்பட்ட விவசாய நிலத்தை வழங்க கோரி மனு: தலைஞாயிறு அருகே பிரிஞ்சிமூலை அம்பேத்கார் நகரை சேர்ந்த 74 பேருக்கு தனியார் தொண்டு நிறுவனம் வாயிலாக விவசாயம் செய்ய நிலம் வழங்கப்பட்டது. இதில் 50 நபர்களுக்கு மட்டும் நிலத்தை வழங்கி விட்டு எஞ்சியுள்ள 24 நபர்களுக்கு நிலம் வழங்கவில்லை. தனியார் தொண்டு நிறுவனம் வாயிலாக வழங்கிய நிலத்தை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க தனியார் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சிலர் பணம் கேட்கின்றனர். எனவே எங்களது நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

Tags : villages ,area ,Keezhayur ,loss ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் 636 வருவாய்...