×

வாசவி கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

ஈரோடு, மார்ச் 3: வாசவி கல்லூரி சுயநிதி பிரிவின் வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் வழிகாட்டி மையம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி இயக்குனர் சிவக்குமார் தலைமை தாங்கி உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக பட்டய கணக்காளர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கி பேசினார். இதில், முருகப்பா குழுமம், சென்னை கிராம உதயம் பவுண்டேஷன், கோவை அடாப் சாப்ட் சொல்யூஷன்ஸ் உட்பட பல்வேறு நிறுவனங்களில் இருந்து முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்தனர். இதில், கல்லூரியின் இளங்கலை இறுதியாண்டு மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 48 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு அலுவலர் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags : Employment Camp ,Vasavi College ,
× RELATED மாவட்ட கலெக்டர் ஆபீசில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம்