×

பழையகோட்டை மாட்டுச் சந்தையில் ரூ.23 லட்சத்துக்கு காங்கயம் இன மாடுகள் விற்பனை

காங்கயம், மார்ச் 2: காங்கயம் அடுத்துள்ள நத்தக்காடையூர் அருகே பழையகோட்டையில் நடைபெற்ற மாட்டுச் சந்தையில், காங்கயம் இன மாடுகள் ரூ.23 லட்சத்திற்கு விற்பனையானது. காங்கயம் அருகே நத்தக்காடையூர் பழையகோட்டையில் காங்கயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் காங்கயம் இன மாடுகள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகிறது.  நேற்று நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 121 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் 60 மாடுகள் மொத்தம் ரூ.23 லட்சத்துக்கு விற்பனையானது. இந்த சந்தையில் அதிக பட்சமாக ரூ.60 ஆயிரத்துக்கு கன்று குட்டியுடன் காங்கயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.


Tags : Kangayam ,sale ,Old Fort ,
× RELATED மாணவி கூட்டு பலாத்காரம் அதிமுக நிர்வாகிக்கு குண்டாஸ்