×

தெருவிளக்கு பராமரிப்பை கண்காணிக்க 3,400 ‘சுவிட்ச் கன்ட்ரோல் பாக்ஸ்’

கோவை, மார்ச் 2: கோவை மாநகராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்குகள் எரிவதை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்தே செயலி வாயிலாக கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக மின் கம்பங்களில் சுவிட்ச் கன்ட்ரோல் பாக்ஸ் பொருத்தப்படுகிறது.இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன.இவற்றில், 91 ஆயிரத்து, 558 தெருவிளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. மின் பயன்பாட்டை குறைக்க ரூ.74.70 கோடி மதிப்பீட்டில் 58 ஆயிரத்து, 878 தெருவிளக்குகள் எல்.இ.டி. பல்புகளாக மாற்றப்பட்டு வருகின்றன. தற்போது பல பகுதிகளில் பல்பு பியூஸ் போவது, எரியாமல் இருளாக இருப்பது போன்ற புகார்கள் அடிக்கடி வருகின்றன.கட்டுப்பாட்டு அறையில் இருந்து தெருவிளக்கு பராமரிப்பை கண்காணிக்கும் வகையில், சுவிட்ச் கன்ட்ரோல் பெட்டி பொருத்தப்படுகிறது. மாநகராட்சி பகுதி முழுவதும் 3,400 ‘சுவிட்ச் கன்ட்ரோல் பாக்ஸ்’ பொருத்தப்பட உள்ளன. வார்டுகளை கவனிக்கும் உதவி பொறியாளர்கள் தங்களது மொபைல் போனில் இதற்கான செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தெருவிளக்குகள் எரிகிறதா என அதன் மூலம் அறியலாம். அலுவலகத்தில் இருந்தும் கம்ப்யூட்டர் வாயிலாக எரியாமல் உள்ள தெருவிளக்குகளை அறிந்து உடனடியாக சரி செய்ய அறிவுறுத்தப்படும்,’’ என்றனர்.

Tags :
× RELATED வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் வியாபாரிகள் வேதனை