×

பெரம்பலூர் மாவட்டத்தில் நெல் அறுவடையில் மிஞ்சிய உலர்தீவனம் உருட்டி விற்க தயார்

பெரம்பலூர்,மார்ச்.2:பெரம்பலூர் மாவட்டத்தில் நெல் வயல்களில் எந்திரத்தால் அறுவடை செய்து உருட்டி விற்கப்படும் உலர் தீவனத்தை அரசே கொள்முதல்செய்து பால் உற்பத்தியாளர்களுக்கு மானியவிலையில் வழங்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மாநிலத்தின் மையத்திலுள்ள பெரம்பலூர் மாவட்ட த்தில், மானாவாரி சாகுபடி யே அதிகம் உள்ளது. ஏரிப் பாசனத்தையோ, ஆற்றுப் பாசனத்தையோ அதிகம் நம்பி இருக்காததால், கி ணற்றுப் பாசனத்தை மட்டுமே பெருமளவு நம்பியிருக்கும் விவசாயிகள் அதிகமுள்ளதால் நெற்பயிர் குறைவாகவே சாகுபடி செய்யப்படுகிறது.

சராசரி மழை அளவைக் காட்டிலும் அதிகம் பெய்தால் மட்டுமே சுமார் 15 ஆயிரம் ஏக்கர் சாகுபடிசெய்யப்படும் நெற்பயிர், நடப் பாண்டு வெறும் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நெல்பயிருக் கான அறுவடை சீசன் தற்போது தொடங்கியுள்ள தால் எந்திரத்தின் மூலம் பெருமளவு அறுவடை நட ந்து வருகிறது. இவை முன் புபோல் வைக்கோல் போர் அமைத்து, சேமிக்கப்படா மல், உலர்தீவனமாக விற்பனை செய்வதற்காக ஒரு மீட்டர் நீளத்திற்கு பண்ட லாக எந்திரத்தின் மூலமா கவே உருட்டி வைக்கப்படு கிறது. இதற்காக ஒவ்வொ ரு கட்டினையும் 45ரூபாய் செலவுசெய்தே எந்திரத் தால் உருட்டவேண்டி உள் ளது. இவ்வாறு உருட்டப்ப ட்ட ஒவ்வொரு உருளை உலர் தீவனமும் ரூ150க்கு விற்கப்படுகிறது.

வியாபாரிகளால் ரூ.150க்கு கொள்முதல் செய்யப்படும் இந்த உலர் தீவன உருளைகள் வெளியே தீவனமாக ரூ.200க்கு விற்கப்படுகிறது.
அறுவடை செய்த விவசாயிகளுக்கு இது குறைந்த விலையாகவே கருதப்படுகிறது. இருந்தபோதும் கறவை மாடுகளை நம்பி பிழைப்பு நடத்தும் பால் உற்பத்தியா ளர்களுக்கு இது மிகப்பெ ரிய தொகையாக கருதப் படுகிறது. இதற்கு முன்பு இதேபோன்று நெல் அறு வடை செய்த வைக்கோல் களை எந்திரங்களால் உரு ட்டிய உருளைகளை அரசே கொள்முதல் செய்து பால் உற்பத்தியாளர்களுக்கு மானிய விலையில் வழங்கி வந்தது.
அதேபோல் நடப்பாண்டும் தமிழக அரசு டெல்டா மாவட்டங்களிலும், பெரம்பலூர் அரியலூர் உள்ளிட்ட இதர மாவட்டங்களிலும் எந்திரங்களால் உருட்டிவிற்கப்ப டும் உலர்தீவனத்தை உற்ப த்திசெய்த விவசாயிகளு க்குப் பாதிப்பின்றி கொள் முதல்செய்து பால் உற்பத் தியாளர்களுக்கு மானிய விலையில் வழங்க நடவடி க்கை எடுக்க வேண்டுமெ ன தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து தமி ழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் செல்லதுரை தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் விடுத்து ள்ள கோரிக்கையில் தெரி வித்திருப்பதாவது :தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, கரூர் ஆகிய டெல்டா மாவட் டங்களிலும், அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் தா.பழூர், பெரம்பலூர் மாவ ட்டத்தில் அரும்பாவூர், பூலாம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் நெல் அறுவடை செய் த வயல்களில் எந்திரங்களால் உருட்டிவைக்கப்பட்டுள்ள வைக்கோல் உலர் தீவ னத்தை நேரடியாகக் கொ ள்முதல் செய்து அவற்றை ஆவின் பால்கூட்டுறவு சொ சைட்டிமூலமாக தமிழக அர சின் மானிய விலையில் கறவை மாடுகள் வைத்திரு க்கும் பால் உற்பத்தியாளர் களுக்கு வழங்கிட வேண் டும். போதிய மழையின் மை, கடும் வெப்பம் போன் றவற்றால் ஏற்பட்டுள்ள வற ட்சியால் தீவனத் தட்டுப்பா டு, அதிகமுள்ள இந்நேரத்தி ல் உலர் தீவனத்தை அரசே கொள்முதல் செய்து வழங் க தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கேட்டுக் கொள்கிறது.

இதில் விற்பனைசெய் யும் விவசாயிகளுக்கு பாதி ப்பின்றி நியாயமான வி லையில் கொள்முதல் செய் து, பால் உற்பத்தியாளர்க ளுக்கு மிகக் குறைந்த மா னியவிலையில் அல்லது50 சதவீத மானியத்தில் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags : district ,Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்டம்...