×

ராஜபாளையத்தில் அன்றாடம் அவதிப்படுத்தும் போக்குவரத்து நெருக்கடி

ராஜபாளையம், மார்ச் 2: ராஜபாளையம் நகர் பகுதியில் தென்காசி - மதுரை சாலை வழியாக அனைத்து வாகனங்களும் வந்து செல்வதால் போக்குவரத்து பெரிதும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் ஏற்படும் நெருக்கடியால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

ராஜபாளையம் நகர் பகுதியில் இணைப்புச் சாலைகள் ஏதும் இல்லாத காரணத்தினால் பல ஆண்டுகளாக பெருகும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக தென்காசி சாலையில் வங்கிகள், வியாபார ஸ்தலங்கள் அனைத்தும் பல ஆண்டுகளாக ஒரே பகுதியில் அமைந்துள்ளன.
மேலும் வாகன வசதிகள் அதிகம் ஏற்பட்ட காரணத்தாலும், போதிய வாகன நிறுத்தம் ஏதும் இல்லாத காரணத்தால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. நகர்ப்பகுதியில் செல்லக்கூடிய ஒரு சில சாலைகளை ஒரு வழிப்பாதையாக மாற்றி போக்குவரத்து விதிமுறைகளை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

Tags : traffic crisis ,Rajapalayam ,
× RELATED ராஜபாளையம் பகுதியில் தென்னை மரங்களில் நோய் தாக்குதல்