×

முத்தனம்பாளையத்தில் புதிய கால்நடை மருத்துவமனை திறப்பு

ஆட்டையாம்பட்டி, மார்ச் 2: ஆட்டையாம்பட்டி அடுத்துள்ள பாப்பாரப்பட்டி கிராமத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகளை விவசாயிகள் வளர்த்து வருகின்றனர். கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுவதற்கு 2 கி.மீ தொலைவில் நைனாம்பட்டி பகுதியிலுள்ள கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டி உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் சிரமத்திற்குள்ளாயினர். இது குறித்து வீரபாண்டி எம்எல்ஏவிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம், முத்தணம்பாளையம் பகுதியில் ஊஞ்சக்காடு மாரியம்மன் கோயில் அருகே, புதியதாக கால்நடை மருத்துவமனை திறக்கப்பட்டது. பாப்பாரப்பட்டி கிராம பஞ்சாயத்து தலைவர் ரவிச்சந்திரன் வரவேற்றார். வீரபாண்டி எம்எல்ஏ மனோன்மணி புதிய மருத்துவமனையை திறந்து வைத்தார். விழாவில் கால்நடை ஆய்வாளர் வனிதா, கால்நடை உதவி மருத்துவர்கள் ரமேஷ், விவேகானந்தன், தயாளன், கண்மணி உள்ளிட்ட குழுவினர் சுமார் 200க்கு மேற்பட்ட மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி போட்டனர். வீரபாண்டி ஒன்றிய தலைவர் வருதராஜ் மற்றும் சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : New Veterinary Hospital ,Muthanampalayam ,
× RELATED வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் ஆர்ஐ சஸ்பெண்ட்