×

கொடைக்கானலில் உணவு, தண்ணீரின்றி தவிப்பதால் ஊருக்குள் வரும் வனவிலங்குகள் தடுக்க வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை

கொடைக்கானல், மார்ச் 2: கொடைக்கானலில் தண்ணீரின்றி தவிக்கும் வனவிலங்குகள், ஊருக்குள் நுழைவதால் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர். இதனை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொடைக்கானலில் தற்போது வறண்ட சூழ்நிலையே நிலவி வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக மழை பெய்யாத காரணத்தினால் கடுமையான வறட்சி நிலவி வருகிறது.

வனப்பகுதிக்குள் வறட்சி நிலவும் காரணத்தினால் காட்டு மாடுகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவது சாதாரணமாகி உள்ளது. இதனால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் அச்சமடைந்துள்ளனர். நகர்ப் பகுதிக்குள் வனவிலங்குகள் நுழையாதபடி வனத்துறையினர் நடவடிக்கை.

Tags : Wildlife activists ,Kodaikanal ,
× RELATED கொடைக்கானலில் இ-பாஸ் முறை ரத்து...