×

14 யானைகள் ஆந்திராவுக்கு சென்றது: வனத்துறை தொடர்ந்து கண்காணிப்பு

வேலூர், மார்ச் 1: காட்பாடி அருகே முகாமிட்டிருந்த 14 யானைகள் ஆந்திராவுக்கு சென்றது. அந்த யானைகள் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதியில் இருந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வழிதவறி வந்த 14 யானைகள் தமிழக வனப்பகுதியில் முகாமிட்டது. மேலும் குடியாத்தம், பேரணாம்பட்டு, காட்பாடி அடுத்த பள்ளத்தூர், பனமடங்கி உள்ளிட்ட கிராமங்களில் விவசாய நிலங்களை சேதப்படுத்தியது.

கிராம மக்கள் பீதியிலிருந்த நிலையில், வனத்துறையினர் யானைகளை விரட்ட முயன்றனர். இதனால், யானைகள் ஆந்திர வனப்பகுதிக்குள் சென்றது. அங்கிருந்து அம்மாநில வனத்துறையினர் விரட்டியதால் மீண்டும் காட்பாடி அடுத்த தொண்டான்துளசியில் உள்ள செட்டேரியில் கடந்த 2 நாட்களாக முகாமிட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் முதல் தமிழகம், ஆந்திர வனத்துறையினர் கூட்டாக சேர்ந்து 14 யானைகளையும் கிருஷ்ணகிரி வனப்பகுதிக்கு விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல், நேற்று காலை யானைகளை கண்காணித்து கொண்டிருந்தனர். நேற்று மதியம் ஆந்திராவுக்கு சென்ற யானைகள் நெட்டப்பாறை வனப்பகுதிக்குள் நுழைந்துவிட்டது. இதனால், யானைகளை தொடர்ந்து கண்காணிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. ஆனாலும், வனப்பகுதிகளில் இருந்து கிராமங்களுக்குள் யானைகள் நுழைந்துவிடாமல் தடுக்க தொடர்ந்து கண்காணித்து வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Andhra Pradesh: Forest Department ,
× RELATED காட்டு யானைகளை விரட்ட ஒத்துழைக்க...