×

கும்மிடிப்பூண்டி அருகே அரசு பள்ளியில் அரிசி கடத்திய சத்துணவு அமைப்பாளர் கைது

கும்மிடிப்பூண்டி, மார்ச் 1: கும்மிடிப்பூண்டி அருகே அரசு பள்ளியில் இருந்து கடத்திய 1 டன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், சத்துணவு அமைப்பாளர் உள்பட 3 பேரை  கைது செய்து விசாரிக்கின்றனர். கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை பஜாரில் இருந்து சத்தியவேடு செல்லும் சாலையில் கவரப்பேட்டை போலீசார் நேற்று மாலை தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது  சக்தியவேடு நோக்கி வந்த லோடு வாகனத்தை மடக்கினர். சோதனையில்,  ஒரு டன் அரிசி இருந்தது தெரியவந்தது. பின்பு  வாகனத்தில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். இதில்,  கவரப்பேட்டை அரசு பள்ளியில் சத்துணவு சமைக்க வைத்திருந்த அரிசியை  விற்பதற்காக எடுத்து சென்றதும், பள்ளியில் சத்துணவு அமைப்பாளர்  ஞானமுனி (51),   ராஜேஷ் (37), பரத்குமார் (35)  ஆகியோர் என தெரியவந்தது. இதையடுத்து அரிசியை போலீசார் பறிமுதல் செய்து மாவட்ட உணவுப் பொருள் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
சத்துணவு அமைப்பாளர் ஞானமுனி உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Rice ,organizer ,government school ,Kummidipoondi ,
× RELATED முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் மோடி: பழ.நெடுமாறன்