×

கோடைக்கு முன்பே கொளுத்தும் வெயில் தர்பூசணி விற்பனை அதிகரிப்பு

தேனி, பிப். 28: கோடைக்கு முன்பே வெயில் கொளுத்துவதால், தேனி பகுதியில் பொதுமக்கள் தாகம் தணிக்க தர்பூசணியை விரும்பிச் சாப்பிடுகின்றனர். இதனால், அதன் விற்பனை அதிகரித்துள்ளது.தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் மழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து இருந்தது. இதன் காரணமாக ஆறுகள், ஓடைகளில் நீர்வரத்து இருந்தது. இதனால், கடந்த ஆண்டு பிப்ரவரியில் குளிர் மற்றும் இதமான காலச்சூழ்நிலை நிலவியது. ஆனால், இந்தாண்டுக்கான வடகிழக்கு பருவ மழை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே நின்றது. இதனால், அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. ஆறுகள், ஓடைகளில் நீர்வரத்து இல்லாமல் வறண்டு வருகிறது.
கடந்த ஒரு வாரகாலமாக தேனியில் அதிகாலை மட்டும் கொஞ்சம் பனி விழுகிறது. காலை 8 மணிக்கு மேல், வெயில் புழுக்கம் தொடங்கி விடுகிறது. காலை 11 மணியில் இருந்து மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் உள்ளதை போன்ற வெயிலின் தாக்கம் இப்போதே இருப்பதால் பகல் நேரத்தில் தேனி முக்கிய சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்படுகிறது.வெயிலின் தாக்கத்தில் இருந்து காத்துக்கொள்ள தேனி நகரின் பல்வேறு இடங்களில் குளிர்பான கடைகளான இளநீர், கரும்புச்சாறு, தண்ணீர்பழம், பப்பாளி சாறு, பனநீர் உள்ளிட்ட குளிர்பானங்கள் விற்பனை களைகட்டத் தொடங்கியுள்ளது. ஆங்காங்கே உள்ள இக்கடைகளில் குளிர்பானங்களை பருக பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக கூடிவருகின்றனர்.

Tags :
× RELATED போடி அருகே ஐடி ஊழியர் வீட்டில் 8 பவுன் நகை ‘அபேஸ்’