×

தொடர் முயற்சி வெற்றியை தேடிதரும் கிட் அண்டு கிம் கல்வி குழும தலைவர் பேச்சு

காரைக்குடி, பிப். 28: விளையாட்டு வீரர்கள் வெற்றியை இலக்காக கொண்டு தொடர் முயற்சி செய்ய வேண்டும் என கிட் அண்டு கிம் கல்விகுழும தலைவர் தொழிலதிபர் அய்யப்பன் தெரிவித்தார்.காரைக்குடி ராஜ வித்யவிகாஸ் சிபிஎஸ்இ பள்ளியின் இரண்டாம் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. முதல்வர் சூர்யபிரபா வரவேற்றார். நிர்வாக இயக்குநர் பிரியதர்ஷினி அய்யப்பன் முன்னிலை வகித்தார். கிட் அண்டு கிம் கல்வி குழும தலைவரும் பள்ளியின் தாளாருமான தொழிலதிபர் அய்யப்பன் தலைமை வகித்து பேசுகையில், ‘மாணவர்கள் கல்வியுடன் சேர்த்து விளையாட்டிலும் கவனம் செலுத்தினால் தான் உடல் உறுதியை வளப்படுத்த முடியும். ஒவ்வொரு மாணவர்களிடம் திறமை உள்ளது.
அதனை கண்டறிந்து வெளிக்கொண்டு வரும் கடமை ஆசிரியர்களிடம் உள்ளது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் விளையாட்டின் மீது ஆர்வத்தை வளர்க்க வேண்டும். தற்போது குழந்தைகள் விளையாட்டில் ஆர்வத்தை காட்டுவதை விட செல்போனில் விளையாடவே ஆர்வம் காட்டுகின்றனர். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற இலக்கை நிர்ணயம் செய்து அதை நோக்கி பயணம் செய்யதால் வெற்றி நிச்சயம்’ என்றார். இதில் அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொறுப்புக்குழு தலைவர் கலியமூர்த்தி, முன்னாள் எம்எல்ஏ சுந்தரம், பேராசிரியர் நாகநாதன், கிட் அண்டு கிம் கல்லூரிகளின் இயக்குநர் சுரேஷ, தளக்காவூர் முன்னாள் ஊராட்சி தலைவர் முருகப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிர்வாக அதிகாரி குமரப்பன் நன்றி கூறினார்.

Tags : Kid ,Chairperson ,Kim Education Group ,
× RELATED பெரம்பலூர் நகராட்சி வார்டு எண் 5ல் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி