×

பெத்தவேளாண் கோட்டகம் கிராமத்தில் 7 ஆண்டுகளுக்கு பிறகு நடுவாய்க்கால் தூர்வாரும் பணி

முத்துப்பேட்டை, பிப்.28: பெத்தவேளாண் கோட்டகம் கிராமத்தில் 7 ஆண்டுகளுக்கு பிறகு நடுவாய்க்கால் தூர்வாரும் பணி துவங்கியது.முத்துப்பேட்டை அடுத்த கீழநம்மங்குறிச்சி ஊராட்சியை சேர்ந்த பெத்தவேளாண்கோட்டகம் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களுக்கு அப்பகுதியை கடந்து செல்லும் நடுவாய்க்கால் முக்கிய பாசன வாய்க்காலாகும். கந்தப்ரிச்சான் ஆற்றிலிருந்து பிரிந்து வரும் இந்த பாசன வாய்க்கால் மூலம் இப்பகுதியில் உள்ள 167 ஹெக்டர் விவசாய சாகுபடி நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி இப்பகுதிக்கு நிலத்தடி நீர் ஆதாரத்தையும் பெற்று தருகிறது. இந்தநிலையில் சுமார் 7ஆண்டுகளாக இந்த பாசன வாய்க்கால் தூர் வரப்படாததால் சென்ற ஆண்டுகளில் போதுமான தண்ணீர் இப்பகுதிக்கு வந்து சேரவில்லை. இதனால் இப்பகுதி சாகுபடி பயிர்கள் கருகி சேதமாகியது. அதேபோல் நிலத்தடிநீர் மட்டமும் பல அடி தூரத்திற்கு அடியில் சென்றன. அதனால் இந்த பாசன வாய்களை தூர் வாரி தரவேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் மட்டுமின்றி கிராம மக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்தநிலையில் சமீபத்தில் நபார்டு வங்கி நிதியுதவி மூலம் இந்த பாசன வாய்க்கால் தூர்வர முடிவு செய்யப்பட்டது. அதன் வகையில் நேற்று தூர் வாரும் பணிகள் துவங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஊராட்சி மன்ற தலைவர் முருகப்பன் துவக்கி வைத்தார். இதில் விவசாய சங்க ஒன்றிய ஒன்றிய செயலாளர் சிவசந்திரன், ஊராட்சி மன்ற உறுப்பினர் வளர்மதி உட்பட கிராம கமிட்டியை சேர்ந்த பலரும் கலந்துக் கொண்டனர்.


Tags : village ,Bethavelan Gotakam ,Madhu Vaikkal ,
× RELATED பைக், டிராக்டர் நேருக்கு நேர் மோதி...