×

காரியாபட்டி அருகே வாறுகால் அடைப்பால் சாலையில் தேங்கிய கழிவுநீர் குடிநீர் குழாயிலும் கழிவுநீர் கலப்பு

காரியாபட்டி, பிப். 27:காரியாபட்டி அருகே உள்ள கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி மற்றும் மாற்றுப்பாதை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காரியாபட்டி அருகே வலுக்குலொட்டி கிராமத்தின் மேற்கு பகுதியில் கிராமத்தின் மொத்த கழிவுநீரும் பெரிய கால்வாய் வழியாக வந்து வெளியே செல்ல வழியில்லாமல் குளம்போல் தேங்கியுள்ளது. அதே இடத்தில் அனைத்து வீதியில் உள்ள கழிவுநீரும் வந்து ஒன்று சேரும் இடமாக உள்ளது. இப்பகுதிக்கு துப்புரவு பணியாளர்கள் மாதம் ஒரு முறை மட்டுமே வந்து தூர்வாருகின்றனர். கழிவுநீர் கால்வாயின் கடைசி பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலங்கள் இருப்பதால், அவர்களது நிலங்களுக்கு கழிவுநீர் வராத அளவுக்கு வாய்க்கால்களை அடைத்துவிட்டனர். இதனால் தெருவில் கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த இடத்தில் உள்ள குடிநீர் குழாய்கள் மூழ்கிவிட்டன. இந்த குழாய்களில் கழிவுநீரும் கலந்துவிடுவதால் கழிவுநீர் கலந்த தண்ணீரை தான் கிராம மக்கள் பிடித்துச் செல்கின்றனர்.

 இந்த நீரை அருந்துபவர்களுக்கு காய்ச்சல், சளி போன்ற தொற்றுகள் ஏற்படுவதாக கிராமத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் சாக்கடை நீர் தேங்கி நிற்பதால் அந்த இடத்தை கடந்து செல்லும் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை சாக்கடைக்குள் தான்  நடந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. கடந்த ஒரு வருடமாக தினமும் அப்பகுதியில் வாழும் பொதுமக்களே கழிவுநீர் கால்வாயை தூய்மை செய்து வருகின்றனர். எனவே இப்பகுதியில் உள்ள பொது மக்களின் நலன் துறை அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து பின்னர் இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kariyapatti ,gutter road ,
× RELATED காரியாபட்டி அரசு மருத்துவமனையில்...