×

ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு பணிகள் தீவிரம்

கோவை, பிப்.27: கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் புதிய ரேஷன் கார்டு கேட்டு ஏராளமானோர் விண்ணப்பித்தனர். இதில் தற்போது 2,300 பேருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளன.கோவை மாவட்டத்தில் 10 லட்சத்து 14 ஆயிரத்து 600 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். தமிழக அரசு போலி ரேஷன் கார்டுகளை ஒழிப்பதற்காக ஸ்மார்ட் கார்டுகளை அறிமுகப்படுத்தியது. ஆதாரை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட் கார்டு உருவாக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் அனைத்துரேஷன் கார்டுதாரர்களுக்கும் இந்த புதிய ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் புதிய ரேஷன் கார்டு கேட்டு பலர் விண்ணப்பம் செய்து வருகின்றனர். இவ்வாறு கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் புதிய ரேஷன் கார்டு கேட்டு ஏராளமானோர் விண்ணப்பித்தனர். இதில் தற்போது 2,300 ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு உள்ளன. இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

புதிய ரேஷன் கார்டு கேட்டு அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஆதார், சமையல் எரிவாயு ரசீது, வீட்டு வாடகை ஒப்பந்த பத்திரம் மற்றும் உரிய ஆவணங்களுடன் இ சேவை மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தினை அலுவலர்கள் சரிபார்த்து ஒப்புதல் அளிப்பார்கள். பின்னர் இந்த புதிய ரேஷன் கார்டுகள் அச்சடிப்பதற்காக சென்னைக்கு அனுப்பப்படும். அங்கு அச்சடிக்கப்பட்டு அந்தந்த தாலுகாவிற்கு முறைப்படி அனுப்பப்படுகிறது. புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிக்கும்போது செல்போன் எண்ணை கவனமாக குறிப்பிட வேண்டும். அந்த செல்போன் எண்ணிற்குதான் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் ரகசிய குறியீடு அனுப்பப்படும். இதன்மூலம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, நீக்கம், முகவரி மாற்றம், பிழை திருத்தம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியும். கோவை மாவட்டத்தில் தற்போது 10 லட்சத்து 14 ஆயிரத்து 600 ரேஷன் கார்டுகள் உள்ளன. கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய 2 மாதங்களில் புதிய ரேஷன் கார்டு கேட்டு ஏராளமானோர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் தற்போது 2,300 புதிய ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. விரைவில் விண்ணப்பித்தவர்களின் ஆவணங்கள் சரிபார்ப்பு முடிந்தவுடன் ஸ்மார்ட் கார்டுகள் அனைவருக்கும் வழங்கப்படும். இவர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட வகைகளும் அந்தந்த ரேஷன் கடைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

அரிசி அட்டைகளாக மாற்றம்:கோவை மாவட்டத்தில் 10 லட்சத்து 14 ஆயிரத்து 600 குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் 76 ஆயிரத்து 778 சர்க்கரை அட்டைகள் ஆகும். இந்நிலையில், 35 ஆயிரத்து 408 சர்க்கரை அட்டைகள் அரிசி அட்டைகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

Tags :
× RELATED வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் வியாபாரிகள் வேதனை