இலையூர் கண்டியங்கொல்லை

ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பு துவக்க விழா ஜெயங்கொண்டம், பிப். 26: ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கண்டியங்கொல்லை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஏசி வசதியுடன் ஸ்மார்ட் கிளாஸ் மற்றும் எல்கேஜி, யூகேஜி துவக்க விழா நேற்று நடந்தது. அரியலூர் கலெக்டர் ரத்னா பள்ளி மாணவர்களுடன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இலையூர் ஊராட்சி மன்ற தலைவர் தங்கம் அறிவழகன் முன்னிலை வகித்தார். அப்துல்கலாம் பசுமை நலச்சங்கம், முன்னாள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ரூ.12 லட்சம் மதிப்பில் ஸ்கூல் வேன், பள்ளிக்கு ஏசி வசதி, புரஜெக்டர், பிரிண்டர் வழங்கினர்.

மாவட்ட கல்வி அலுவலர் சுந்தரராஜ், வட்டார கல்வி அலுவலர் முனியம்மாள், ஆண்டிமடம் தாசில்தார் குமரய்யா, வட்டார வளர்ச்சி அலுவலர் குருநாதன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் நிர்மலா சாமிநாதன், வசந்தி உலகநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியை விஜயராணி வரவேற்றார். ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.

Related Stories: