×

அத்தியாவசிய பொருட்கள் சரிவர வழங்காததால் ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டம்: பொதுமக்கள் திரண்டனர்

திருத்துறைப்பூண்டி, பிப்.26: அத்யாவசிய பொருட்கள் சரிவர வழங்காததால் ரேஷன் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கம் ஊராட்சியில் 2 ரேஷன் கடைகள் உள்ளது. இதில் குருமாங்குளம் பகுதியில் பகுதிநேர ரேஷன் கடை உள்ளது. வாரத்தில் செவ்வாய், சனிக்கிழமை மட்டுமே இக்கடை திறக்கப்படும்.இக்கடையில் 239 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் 239 குடும்ப அட்டைக்கு மொத்தபருப்பு 39 கிலோதான் கடந்த பல மாதமாக வழங்கப்பட்டு வருகிறது.

ஆயில் ஒரு லிட்டர் 90 முதல் 110 குடும்ப அட்டைக்கு கிடைக்கிறது. இதேபோல இரண்டு ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் முறையாக வழங்காததை கண்டித்து குருமாங்குளம் பகுதி நேர ரேஷன் கடை முன்பு ஆதிரெங்கம் திமுக ஊராட்சிமன்ற தலைவர் வீரசேகரன் தலைமையில் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து திமுக ஊராட்சி மன்ற தலைவர் வீரசேகரன் கூறிகையில், ஆதிரெங்கம் ஊராட்சியில் இரண்டு ரேஷன் கடைகள் உள்ளது. இந்த இரண்டு கடைகளிலும் அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்படுவதில்லை. அதுவும் பகுதி நேர ரேஷன் கடையில் கஜாபுயலுக்கு பின்பு இதுவரை ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் பருப்பு, ஆயில் கிடைக்கவில்லை. இனியாவது முறையாக ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் இல்லை என்றால் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்றார்.

Tags : ration shop ,rallies ,
× RELATED 12 கோடி வேலைகளை பறித்த பாஜ இந்தியா...