×

28 முதல் கோமாரி தடுப்பூசி முகாம்

சிவகங்கை, பிப்.26: சிவகங்கை மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் பிப்.28 முதல் தொடங்க உள்ளது. சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் முதல் சுற்று கால் மற்றும் வாய் காணை(கோமாரி) கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாட்டினங்களுக்கும் இலவசமாக வரும் 28.02.2020 முதல் 19.03.2020 வரை தொடர்ந்து 21 நாட்கள் தடுப்பூசி போடப்பட உள்ளது. அனைத்து கிராமங்களிலும் தடுப்பூசி போடப்பட உள்ள இம்முகாமினை பயன்படுத்தி அனைத்து மாட்டினங்களுக்கும் இலவசமாக கோமாரி தடுப்பூசி போட்டு நோய் தாக்குதலில் இருந்து தடுக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு அருகிலுள்ள கால்நடை உதவி மருத்துவரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : coma vaccination camp ,
× RELATED அழகப்பா பல்கலை சின்டிகேட் உறுப்பினர்கள் நியமனம்