×

பஸ்சில் ஜேப்படி வாலிபர் கைது

ஈரோடு, பிப். 25:   ஈரோடு காளைமாட்டு சிலை ஈஸ்வரன் வீதியை சேர்ந்தவர் முஸ்தபா மகன் அஜித்குமார் (21). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து பன்னீர் செல்வம் பார்க் செல்வதற்காக டவுன் பஸ்சில் ஏறி பயணித்தார். பஸ் தீயணைப்பு நிலையம் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது, அஜித்குமார் பின்னால் நின்றிருந்த மர்மநபர் ஒருவர், அஜித்குமாரின் பாக்கெட்டில் இருந்த ரூ.200ஐ திருடிக்கொண்டு பஸ்சில் இருந்து இறங்கி ஓட முயன்றார். இதைப்பார்த்த அஜித்குமார் திருடன்...திருடன்... என கூச்சலிட்டவாறே மர்ம நபரை விரட்டினார்.

சத்தம்கேட்டு சக பயணிகள் மர்ம நபரை மடக்கி பிடித்து ஈரோடு சூரம்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். அந்த நபர் ஈரோடு சூரம்பட்டி வலசு கட்டபொம்மன் வீதியை சேர்ந்த செல்வா (27) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து செல்வாவை போலீசார் கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

Tags : Jeppeti ,
× RELATED தாளவாடி அருகே மாங்காய்களை பறிக்க...