×

தமிழ்நாடு கொங்கு இளைஞர்பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

அலங்காநல்லூர். பிப்.25: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் அய்யூர் தயாளன் தலைமையில் நடந்தது. இதில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சிமன்ற தலைவர் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பேரவை நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.

பேரவையின் மாநில தலைவர் தனியரசு எம்.எல்.ஏ பிறந்தநாளையொட்டி அலங்காநல்லூர், பாலமேடு பகுதியில் உள்ள கிராம கிளைகள் தோறும் கொடியேற்றி இனிப்பு வழங்குவது. தொடர்ந்து ரத்ததானம் உள்ளிட்ட பொதுமருத்துவ முகாம், மரக்கன்றுகள், நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பாக இந்த ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் நிர்வாகிகள் பார்த்திபன், பாலகிருஷ்ணன், மருதுபாண்டி, நல்லயைன், ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Tamil Nadu ,Kongu Youth Forum Advisors Meeting ,
× RELATED நாடு முழுவதும் உள்நாட்டு...