×

காரைக்குடியில் பட்டா கத்தியுடன் ரவுடிகள் ரகளை

காரைக்குடி, பிப். 21: காரைக்குடியில் மளிகை கடை, உணவகத்திற்குள் புகுந்து பட்டா கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட ரவுடிகளை போலீசார் தேடி வருகின்றனர். காரைக்குடியில் வாட்டர்டேங் பகுதியில் மளிகை கடை ஒன்று உள்ளது. இக்கடைக்கு நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் சிலர் காரில் வந்து பொருட்கள் வாங்குகினர். அப்போது அவர்களுக்கும், கடை ஊழியருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் பட்டாகத்தியால் ஊழியரை தாக்க முயன்றுள்ளனர். ஊழியர் உயிருக்கு பயந்து அருகிலிருந்த உணவகத்திற்குள் புகுந்துள்ளார். எனினும் ஆத்திரம் தீராத மர்மநபர்கள், உணவகத்தை அடித்து நொறுக்கி சூறையாடிவிட்டு காரில் ஏறி தப்பி சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டிஎஸ்பி அருண் கூறுகையில், ‘பட்டாகத்தியுடன் இருந்த ரவுடிகள் குறித்து விசாரித்து வருகிறோம். விரைவில் பிடித்து உரிய நடவடிக்கை எடுப்போம்’ என்றார்.

Tags : Rowdies ,patta knife ,
× RELATED அமெரிக்க தூதரகம் அருகே ரவுடிகள் மீது...