×

தமிழ் வளர்ச்சி துறை சார்பில் மார்ச் 2ம் தேதி ஆட்சிமொழி சட்ட வார விழா தொடக்கம்

திருவள்ளூர், பிப். 21: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமார் வெளியிட்ட  அறிக்கையில் கூறியிருப்பதாவது:  தமிழ் ஆட்சி மொழி சட்டம் கொண்டு வந்த 27.12.1956 நாளை நினைவுகூரும் வகையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் வரும் மார்ச் 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. இதன் அடிப்படையில் வரும் 2ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் கணினித் தமிழ் விழிப்புணர்வு கருத்தரங்கம், 3ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் ஆட்சிமொழி மின்காட்சியுரை நடத்துதல், 4ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் தமிழில் வரைவு குறிப்புகள் எழுதுவதற்கான பயிற்சி, 5ம் தேதி திருவாலங்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆட்சிமொழித் திட்ட விளக்கக் கூட்டம் நடத்துதல், 6ம் தேதி திருநின்றவூரில் தமிழ் அமைப்புகள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களுடன் இணைந்து விழிப்புணர்வு பேரணி நடத்துதல், 7ம் தேதி  திருநின்றவூர் ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆட்சிமொழி பட்டிமன்றம் தமிழ் வளர்ச்சித் துறை இலக்கிய பட்டறை மாணவர்கள் 5 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்பு, 8ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் வைக்க வலியுறுத்தி நிறுவன உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்துதல் ஆகிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பொதுமக்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags : Tamilnadu Development Dept ,
× RELATED தர்மபிரபு 2ம் பாகம் உருவாகிறது