×

வெறி நாய்க்கடி இல்லா சென்னை திட்டத்தில் 68 ஆயிரம் தெரு நாய்களுக்கு தடுப்பூசி

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வெறிநாய்கடி இல்லாத சென்னை திட்டத்தின்படி தெரு நாய்களுக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை துணை ஆணையர் மதுசூதன் ரெட்டி, மாநகர நல அலுவலர், மாநகர கால்நடை மருத்துவ அலுவலர் ஆகியோர் மேற்பார்வையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 68 ஆயிரம் நாய்களும் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ெதரிவித்துள்ளார். இதன்படி மாதவரத்தில் 8846, ஆலந்தூரில் 3474, அம்பத்தூரில் 8243, சோழிங்கநல்லூரில் 4461, வளசரவாக்கத்தில் 5869, அண்ணாநகரில் 3346, அடையாற்றில் 4186, மணலியில் 3551, பெங்குடியில் 4598, திரு.வி.நகரில் 3835, ராயபுரத்தில் 2579, தண்டையார்பேட்டையில் 5392, தேனாம்பேட்டையில் 3706, திருவொற்றியூரில்  3557, கோடம்பாக்கத்தில் 3079 என மொத்தம் 68,877 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் செயல்படுத்தும்போது அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களின் செல்ல பிராணிகளுக்கும் தடுப்பூசி போடவேண்டும் என்று கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் 4021 செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. என, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Tags : street dogs ,
× RELATED தெலங்கானாவில் கிராம மக்கள்...