×

தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் கே.செல்லப்பனுக்கு அறிவிப்பு..!

சென்னை: தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது கே.செல்லப்பனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது:சிறந்த மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது குறித்த அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மேற்கு வங்க கவிஞர் ரவிந்திரநாத் தாகூரின் கோரா நாவலை தமிழில் மொழி பெயர்த்த கே. செல்லப்பன்- அவர்களுக்கு சிறந்த மொழி பெயர்ப்புக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருக்குறளை இந்திமொழி பெயர்த்த டி.இ.எஸ் ராகவனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. செல்லாத பணம் நாவலுக்காக தமிழ் எழுத்தாளர் இமையத்திற்கு கடந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.  கவிஞர் சல்மாவின் இரண்டாது ஜாமங்களின் கதையை மராட்டியத்தில் மொழி பெயர்த்ததற்காக சோனாலி நாவாங்குளுகுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருதினை பிரபல எழுத்தாளரும், சாகித்ய அகாடமி தலைவருமான விஸ்வநாத் பிரசாத் திவாரி வழங்கினார். தமிழ் எழுத்தாளர் இமையத்திற்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையும், செப்பு பதக்கமும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. …

The post தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் கே.செல்லப்பனுக்கு அறிவிப்பு..! appeared first on Dinakaran.

Tags : K. Chellappan ,Chennai ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...