உயர்மின் அழுத்தத்தால் வீட்டில் தீ விபத்து வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து நாசம்

சாத்தூர், பிப்.18: சாத்தூர் அருகே ரூக்குமுஞ்சி கிராமத்தில் உயர்மின் அழுத்தம் காரணமாக வீட்டில் தீப்பற்றி வீட்டு உபயோக பொருள்கள் எரிந்து நாசமானது. தீ விபத்து குறித்து அம்மாபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாத்தூர் அருகே ரூக்குமுஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் ராஜலட்சுமி (60). இவர் ஒய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர். இவரது வீட்டில் நேற்று மதியம் மின்சாரம் தடைபட்டதாகவும், பின்னர் மீண்டும் மின்சாரம் வந்தபோது உயர்மின் அழுத்தும் ஏற்பட்டு, வீட்டில் உள்ள டியூப்லைட், மின்விசிறி, குளிர்சாதனப்பெட்டி, தொலைகாட்சி உள்ளிட்ட பொருள்கள் பலத்த சத்ததுடன் வெடித்து சிதறி சேதமடைந்துள்ளது.

இந்த விபத்தில் வீடு முழுவதும் புகைமண்டலமானது. இதனால் அதிர்ச்சியடைந்த அருகில் குடியிருப்பவர்கள் சாத்தூர் தீயணைப்புதுறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புதுறையினர் தீயை அணைத்தனர். அதற்குள் வீட்டில் இருந்த வீட்டு உபயோக

Related Stories: