×

பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் சுற்றுச்சூழல் பூங்கா விரைவில் திறப்பு: அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் ஆய்வு

சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் சுற்றுச்சூழல் பூங்கா விரைவில் திறக்கப்படவுள்ள நிலையில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் ஆய்வு செய்தார். பள்ளிக்கரணை சதுப்புநிலப்பகுதி, கடந்த 1960ம் ஆண்டு 6 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் இருந்தது. ஆனால், நகரமயமாதல் காரணமாகவும், தொழில்மயம், கல்வி நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்களின் ஆக்கிரமிப்பு காரணமாகவும் தற்போது 700 ஹெக்டேர் பரப்பளவிற்கு சுருங்கியுள்ளது. இந்த சதுப்பு நிலப்பகுதியில் 176 வகையான பறவை இனங்கள், 10 வகையான பாலூட்டிகள், 21 வகையான ஊர்வன இனங்கள், 10 வகையான நிலநீர் வாழ்வினங்கள், 50 வகையான மீன் இனங்கள், 9 வகையான நத்தை இனங்கள், 5 வகையான ஒட்டு மீன் இனங்கள், 14 வகையான வண்ணத்து பூச்சிகள் உள்ளன.கடந்த 2020-21ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 41,849 பறவைகள் இங்கு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவற்றை பாதுகாக்கும் வகையில், 42 வகையான உள்நாட்டு தாவர வகைகள் மற்றும் புல்வெளிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதைதவிர, தாம்பரம்-வேளச்சேரி நெடுஞ்சாலையில் சதுப்பு நிலத்தின் எல்லையில் 1700 மீ. நீளத்திற்கு தடுப்பு சுவர் அமைத்து சதுப்பு நிலம் பாதுகாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சதுப்பு நிலத்தின் விவரங்களை தெரிந்துகொள்ளும் வகையில் பெயர் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சின் குப்பை மேடாக இருந்த பகுதி முழுமையாக சீரமைக்கப்பட்டு சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது.  இந்த சுற்றுச்சூழல் பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் திறக்கப்படவுள்ளது. இதற்கான பணிகளை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது, சுற்றுச்சூழல் பூங்காவில் பறவைகள் வந்து அமரக்கூடிய நீர்நிலைகளில் தேவையான வசதிகள் அமைத்து கொடுப்பது குறித்தும், பூங்கா நடைபாதையில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும், ஓய்வு எடுக்கவும் தேவையான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதை யும் ஆய்வு செய்தார். சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ், மாவட்ட வன அலுவலர் பிரியதர்ஷினி, வனச்சரக அலுவலர் சரண் உள்ளிட்டோர் உடனிருந்தனர்….

The post பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் சுற்றுச்சூழல் பூங்கா விரைவில் திறப்பு: அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Minister ,Ramachandran ,Chennai ,Forests ,Schoolkurala Swamp ,School Swamp Ecological Park ,
× RELATED ரூ32,000 லஞ்சம் வாங்கிய பெண் வருவாய் ஆய்வாளர்கள் கைது