×

4ம் கூட்டு குடிநீர் திட்டத்தில் தண்ணீர் வழங்க நடவடிக்கை

அன்னூர், பிப். 19:  அன்னூர் ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு, முதல் கட்டமாக கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றிய சேர்மன் அம்பாள் பழனிச்சாமி தலைமையில் நடந்தது. துணைச் சேர்மன் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குழந்தைசாமி, விஜயராணி, ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய பொறியாளர்கள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் எட்டு இடங்களில் உள்ள அங்கன்வாடி மையம் மற்றும் சத்துணவு மையங்கள் இடித்து அகற்றுவது, திருப்பூர் முதலாம் கூட்டு குடிநீர் திட்டத்தில் மூலம் குடிநீரை இதுவரை பயன்பெற்று வந்த அன்னூர், குருக்கலியாம்பாளையம், ஊத்துப்பாளையம், பொகலூர் ஆகிய பகுதிகளில் இருந்த குடிநீர் குழாய்களில் வரும் நீர் துண்டிப்பு ஏற்பட்டு உள்ளது. இதற்கு மாற்றாக நான்காம் கூட்டு குடிநீர் திட்டத்தில் இணைப்பு கொடுத்து, செய்வதற்காக அரசிடம் உரிமை கூறுவது தொடர்பாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் இக்கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை, சத்துணவுத் துறை, வேளாண்துறை, அதிகாரிகள் தாங்கள் செயல்படுத்தும் நலத்திட்டங்கள் குறித்து பேசினர்.

Tags :
× RELATED வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் வியாபாரிகள் வேதனை