×

ரூ.10 ஆயிரம் மட்டுமே நிதி ஒதுக்கீடு விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு

விருதுநகர், பிப்.18: தமிழகத்தில் 9 ரயில்வே திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.10 ஆயிரம் மட்டுமே நிதி ஒதுக்கி இருப்பதாக எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். விருதுநகர் எம்பியும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மோடி-அமித்ஷா அரசு ரயில்வே திட்டங்களில் தனியார் துறையையும் அதே நேரத்தில் தமிழக திட்டங்களுக்கான ஒதுக்கி உள்ள நிதி ஒதுக்கீட்டை பார்த்தாலே தெரிகிறது. தமிழகத்தின் 10 இருவழிப்பாதை திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.2 கோடியே 70லட்சத்து 10ஆயிரம் ஒதுக்கி உள்ளனர். இதில் ராமேஸ்வரம் - தனுஷ்கோடி 17 கி.மீ ரூ.2 கோடியே 70 லட்சம், மீதமுள்ள ரூ.10ஆயிரத்தை மதுரை - தூத்துக்குடி(வழி அருப்புக்கோட்டை) 143 கி.மீ, திண்டிவனம்-செஞ்சி(70கி.மீ), திண்டிவனம்-நகரி(179கி.மீ), அத்திபட்டு-புத்தூர்(88.3கி.மீ), ஈரோடு-பழநி(91.05கி.மீ), சென்னை-கடலூர்(179கி.மீ), பெரும்புதூர்-கூடுவாஞ்சேரி(60கி.மீ), மொரப்பூர்-தர்மபுரி(36கி.மீ), பெங்களுர்-சத்தியமங்கலம்(260கி.மீ) ஆகிய 9 திட்டங்களுக்கு ஒதுக்கி உள்ளனர். இதை வைத்து பேப்பர், பேனா கூட வாங்க முடியாது.

மதுரை-தூத்துக்குடி திட்டத்தை பெரிய அளவில் அறிவித்து, தற்போது ஆயிரத்தை ஒதுக்கி ஏமாற்றி உள்ளனர். இதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம். பாராளுமன்றத்தில் 4 முறை அமைச்சரை சந்தித்து மனு கொடுத்த பிறகும், சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை அனைத்து நாட்களும் தொடர்ந்து இயக்கக்கோரி பேசியும் வஞ்சகம் செய்கிறது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது காங். மாவட்ட தலைவர் தளவாய் பாண்டியன், நகர தலைவர் வெயில் முத்து, சிவஞானபுரம் ஊராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்பட கட்சியினர் உடனிருந்தனர்.

Tags : Manikkam Tagore ,Virudhunagar ,Rs ,
× RELATED வெள்ளை ஈ, வாடல் நோய் தாக்கிய தென்னை...