×

கடமலை-மயிலை ஒன்றியத்தில் சோலார் விளக்குகள் பழுதால் சாலைகளில் விபத்து அதிகரிப்பு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வருசநாடு, பிப். 16: கடமலை-மயிலை ஒன்றியத்தில் சாலைகளில் பழுதாகிக் கிடக்கும் சோலார் விளக்குகளால், விபத்துகள் அதிகரித்து வருகின்றன.
கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள கண்டமனூர், பொன்னம்மாள்பட்டி பொன்நிலம், டாணா தோட்டம், அய்யனார்கோவில், கேகே புலியூர், தேவராஜ் நகர், மயிலாடும்பாறை ஆகிய ஊர்களில் உள்ள சாலைகளில் நெடுஞ்சாலைத்துறை மூலம் சோலார் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விளக்குகள் முறையான பராமரிப்பின்றி பழுதாகிக் கிடக்கின்றன. இதனால், இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் சாலைகளில் மேடு, பள்ளம் தெரியாமல், வளைவு தெரியாமல் விபத்தில் சிக்குகின்றனர். சில சமயங்களில் உயிர்ச்சேதமும் ஏற்படுகிறது. இது குறித்து கடமலை-மயிலை ஒன்றிய பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும், நெடுஞ்சாலைத் துறைக்கும் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

இது குறித்து பொன்னம்மாள்பட்டி பழனிச்சாமி கூறுகையில், ‘கடமலை மயிலை ஒன்றியத்தில் பெரும்பாலான சாலைகள் மலைப்பகுதியில் அமைந்துள்ளன. இதில், அபாய வளைவுகள் அதிகமாக உள்ளன. இந்த அபாய வளைவுகளில் நெடுஞ்சாலைத்துறை மூலம் சோலார் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விளக்குகள் கடந்த மூன்று மாதமாக பழுதாகி கிடக்கின்றன. இதனால், இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் சாலைகளில் பள்ளம் மேடு தெரியாமல், அபாய வளைவுகளில் விபத்தில் சிக்குகின்றனர். இது குறித்து மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்து சாலைகளில் பழுதான சோலார் விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : road accidents ,
× RELATED தமிழ்நாட்டில் சாலை விபத்து தடுக்க...