×

பள்ளி விளையாட்டு விழா

காரைக்குடி, பிப்.17:  காரைக்குடி தி லீடர்ஸ் பள்ளி குழுமம் சார்பில் விளையாட்டு விழா நடத்தப்பட்டது. பள்ளி இயக்குநர் ஞானகுரு வரவேற்றார். பள்ளிக்குழும தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். விளையாட்டு வீரர் அண்ணாவி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசுகையில், விளையாட்டு என்பது ஒருவகை உடற்பயிற்சி. விளையாட்டுக்கு வீரர் ஆவதற்கு உடல் முக்கியம். நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும். துரித உணவுகளை தவிர்க்க வேண்டும். தன்னம்பிக்கை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.  டிரஸ்டி செபஸ்தியான் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு புவி வெப்பமாவதை தடுக்கவும், மாணவர்களிடையே இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்க்க மரக்கன்றுகளுடன் மாணவர்கள் அணிவகுப்பு வந்தனர்.

Tags : School Sports Festival ,
× RELATED செல்லப்பன் வித்யாமந்திர் பள்ளியில் விளையாட்டு விழா பரிசளிப்பு