×

மயிலாடுதுறை அருகே கொள்ளிடம் ஆற்றில் மணல் கொள்ளை

மயிலாடுதுறை,பிப்.17: மயிலாடுதுறை அரகே கொள்ளிடம் ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட லாரி டிரைவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர். லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மணல்மேடு பகுதியில் கொள்ளிடம் ஆற்றிலிருந்து கடந்த வாரம் முதல் மணல் குவாரி செயல்படுவதற்கு மணல் அள்ளி சென்று ராதாநல்லூர் அரசு மணல் கிடங்கில் சேமிக்கப்பட்டு வருகிறது. மணலை பொக்லேன் மூலம் லாரியில் ஏற்றி சென்று கிடங்கில் சேமிக்கும் வேலையை கான்ட்ராக்ட் எடுத்த நபர்கள் தங்கள் இஷ்ட்டம்போல் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
தினமும் அதிகாலையில் 10க்கும் மேற்பட்ட லாரிகள் மணலை ஏற்றிக்கொண்டு சென்னையை நோக்கி செல்கிறது. இது குறித்து நாகை மாவட்ட எஸ்.பி.செல்வநாகரத்தினம், கலெக்டர் பிரவின்பிநாயர் ஆகியோர் தனிப்படை ஒன்றை அமைத்தனர். அதில் மயிலாடுதுறை தாசில்தார் முருகானந்தம், சிறப்பு காவல்படை உதவிஆய்வாளர் பாபுராஜா ஆகியோர் தலைமையில் அதிரடிக்குழு ஒன்று அமைக்கப்பட்டு நேற்று விடிய விடிய ரகசியமாக ரோந்துபணியில் ஈடுபட்டனர். எதிர்பார்த்தபடியே மணல்மேடு அருகே உள்ள திருவாளபுத்தூர் சாலையில் சாரை சாரையாக லாரிகள் சென்றதை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது 7 லாரிகளில் பந்தநல்லூர் பகுதியிலிருந்து தனியார் திடலிலிருந்து அரசு அனுமதியின்றி சவுடுமணல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. லாரி டிரைவர்கள் ஐவநல்லூர் மகேஷ்(30), பூலாமேடு வீரமணி(31), வடரங்கம் கண்ணன்(37), வல்லம்படுகை ராமச்சந்திரன்(31), நல்லவிநாயகபுரம் சண்முகம்(49), பிராம்பட்டு கண்ணன்(32), காட்டுக்கூடலூர் பிரபுதேவா(30) ஆகியோர் மற்றும் லாரி உரிமையாளர்களான காட்டுவெளிச்சாவடி சங்கர், வல்லம்படுகை ராஜலிங்கம், ராமச்சந்திரன், ராமலிங்கம் ஆகியோர் மீது மணல்மேடு காவல்நிலையத்தில் மயிலாடுதுறை தாசில்தார் முருகானந்தம் அளித்த புகாரின்பேரில் 7 லாரி டிரைவர்களை கைதுசெய்தனர். மேலும் லாரி உரிமையாளர்கள் 4 பேர்மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Tags : river ,Kalutti ,Mayiladuthurai ,
× RELATED அணையில் தண்ணீர் திறப்பால் மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு