×

கோலணி மட்டம் பகுதியில் கார் டயர் திருட்டு

குன்னூர், பிப். 17: குன்னூர் காட்டேரி டேம் அருகே உள்ளது கோலணிமட்டம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் காரினை கோலணிமட்டம் பகுதியில் நிறுத்தி சென்றுள்ளார்.
 வழக்கம் போல நேற்று காலை பணிக்கு செல்ல காரின் அருகே வந்து பார்த்துள்ளார். அப்போது இரண்டு டயர்கள் திருடப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். நள்ளிரவில் மர்ம நபர்கள் காரின் டயர்களை திருடியுள்ளனர். பின் பக்கத்தில் இருந்த டயரினை கழட்டிவிட்டு முன் பக்கம் சக்கரம் கழன்று வராததால் அப்படியே விட்டு சென்றுள்ளனர்.
இது குறித்து மணிகண்டன் கொலக்கம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதே போல கடந்த சில நாட்களுக்கு முன் அதிகரட்டி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருச்சக்கர வாகனத்தை திருடி சென்றது குறிப்பிடத்தக்கது.
வனப்பகுதிகள் நிறைந்த கிராம பகுதிகளில் இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : area ,Kolani Mattam ,
× RELATED குஜராத் ராஜ்கோட் பகுதியில் வணிக வளாக...