×

வடகனூர், குன்னத்தூரில் ₹25 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி

போச்சம்பள்ளி, பிப்.13: மத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வடகனூர் மற்றும் குன்னத்தூரில் ₹25 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.  மத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட குன்னத்தூர் வடகனூர் கிராமத்திலிருந்து,  உப்பாரப்பட்டி வரை தார் சாலை அமைக்க ₹6 லட்சம் மதிப்பிலும், குன்னத்தூரிலிருந்து கீழ் எட்டிப்பட்டி வரை ₹19 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை ஊத்தங்கரை எம்எல்ஏ மனோரஞ்சிதம் நாகராஜ் தலைமை வகித்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற தலைவர்கள் மாதம்மாள்முனிராவ், பழனியம்மாள்மனோகரன், வங்கி தலைவர் சக்தி, குன்னத்தூர் பெருமாள், தொழிலதிபர் பூபாலன், நடராஜ், தமிழ்செல்வன், மணி, பிரகாஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kunnathoor ,Vadakkanur ,
× RELATED குன்னத்தூரில் ரூ.5.94 லட்சத்துக்கு கருப்பட்டி ஏலம்