×

பட்டமளிப்பு விழாவில் எஸ்பி அறிவுரை மதமாற்றத்தை தடுத்தவர்கள் மீது அவதூறாக பேசி சமூக வலைதளங்களில் பதிவிட்ட அறந்தாங்கி பெண் கைது

அறந்தாங்கி, பிப். 13: அறந்தாங்கியில் மதமாற்றத்தை தடுத்தவர்கள் மீது அவதூறாக பேசி சமூக வலைதளங்களில் பதிவிட்ட பெண் கைது செய்யப்பட்டார். அறந்தாங்கி அடுத்த மூக்குடியை சேர்ந்த முத்தையா மனைவி கலா, கருப்பையா மனைவி ராஜலட்சுமி, ஆறுமுகம் மனைவி தனலட்சுமி. இவர்கள் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறியுள்ளனர். இந்நிலையில் இவர்கள் அதே பகுதியை சேர்ந்த பன்னீர் மனைவி இந்திரா என்பவரை இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதற்கு முயற்சித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த இந்திராவின் உறவினர்கள், மதமாற்ற முயற்சியை தடுத்ததுடன் இதற்கு காரணமாக இருந்தவர்களை கண்டித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த கலா மூக்குடியை சேர்ந்த இந்திராவை மதமாற்றம் செய்யும் முயற்சியை தடுத்த அதே ஊரை சேர்ந்த ஆண்கள் பலர் ஒன்று சேர்ந்து அவரது குடும்பத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரையும், தன்னையும் மானபங்கம் செய்ய முயன்றதாக முகம் சுளிக்க வைக்கும் வீடியோ பதிவுகளை வாட்ச் ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த பன்னீர், அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரவீந்திர் வழக்குப்பதிந்து சமூக வலைத்தளங்களில் அவதூறாக வீடியோ பதிவிட்டதுடன் இரு மதங்களுக்கு இடையே பிரச்னையை தூண்டும் விதமாக செயல்பட்ட கலா, ராஜலட்சுமி, தனலட்சுமி ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் கலாவை கைது செய்தனர்.

Tags : SP ,graduates ,
× RELATED ஈரோட்டில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை