×

முத்துப்பேட்டையில் துப்புரவு தொழிலாளி மண்டை உடைப்பு 2 பேர் கைது

முத்துப்பேட்டை, பிப். 12: முத்துப்பேட்டை ஆசாத்நகரை சேர்ந்தவர் முத்தையன்(40). இவர் பேரூராட்சியில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் யூனியன் ஆபீஸ் சாலையில் இரும்பு கடை நடத்திவரும் முத்துராமலிங்கம் மகன் அழகர்(31), குமரையா(45) ஆகியோருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை வேலைக்கு சென்று கொண்டிருந்த முத்தையனை வழிமறித்த அழகர், குமரையா ஆகிய இருவரும் இரும்பு கம்பியால் அவரது தலையில் சரமாரியாக தாக்கினர்.

இதில் பலத்த காயம் அடைந்த அவர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து முத்துப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர்கள் தினேஷ்குமார், சுந்தரபாபு ஆகியோர் வழக்கு பதிந்து அழகர், குமரையா ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : persons ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில்...