×

திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்தாலோசனை கூட்டம் பூண்டி கலைவாணன் பங்கேற்பு

நீடாமங்கலம், பிப். 12: நீடாமங்கலம் கலைஞர் அறிவாலயத்தில் திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மாவட்ட குழு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட செயலாளருமான பூண்டி கலைவாணன் தலைமையில் நடந்தது. ஒன்றிய செயலாளர்கள் வடக்கு அண்ணாதுரை, தெற்கு மாயவநாதன், நகர செயலாளர் ராஜசேகரன், ஒன்றியக்குழு தலைவர் செந்தமிழ்ச்செல்வன், மாவட்ட விவசாய அணி தேசபந்து, மாவட்ட மகளிரணி ராணிசேகர், மாவட்ட தொண்டரணி சுந்தர், ஒன்றிய அவைத்தலைவர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு அணியினர் கலந்து கொண்டனர்.

நீடாமங்கலம் ஒன்றியத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம். உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் வெற்றி பெற்ற அனைவரும் மக்களுக்காக சிறப்பாக பணியாற்றி வரும் சட்டமன்ற தேர்தலில் அதிக இடத்தை கைப்பற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வராக்க பாடுபட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Kalaivanan ,consultation meeting ,Representatives ,DMK ,
× RELATED ஆந்திராவில் ரோஜாவுக்கு எதிர்ப்பு...