×

பிளஸ்2 பொதுத்தேர்வு துவங்க உள்ள நிலையில் நாமக்கல் சிஇஓ கோவைக்கு மாற்றம்

நாமக்கல், பிப்.12: பிளஸ்2 பொதுத்தேர்வு துவங்க உள்ள நிலையில் நாமக்கல் சிஇஓ கோவைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றி வரும் உஷா(49), கோவை மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றி வரும் சிஇஓ அய்யணன், நாமக்கல் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். உஷா, நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டாக பணியாற்றி வருகிறார். அடுத்த மாதம் பிளஸ்2 அரசு பொதுத்தேர்வுகள் துவங்க உள்ள நிலையில் முதன்மைக் கல்வி அலுவலர் மாற்றப்பட்டுள்ளது ஆசிரியர் சங்கங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிளஸ்2 செய்முறை தேர்வு பணிக்கு அமர்த்தப்பட்ட அகத் தேர்வாளர்கள், புறத் தேர்வாளர்கள் நியமனத்தில் குளறுபடி நடந்ததாக ஆசிரியர் சங்கங்கள் தேர்வுத்துறை இயக்குனரிடம் புகார் அளித்தை தொடர்ந்து அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு புதிய உத்தரவு தயாரிக்கப்பட்டு செய்முறை தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முதன்மைக் கல்வி அலுவலர் மாற்றப்பட்டுள்ளார். முதன்மைக் கல்வி அலுவலர் உஷா, அரசு பள்ளிகள் பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் ஆசிரிய, ஆசிரியைகளிடம் கண்டிப்புடன் நடந்து கொண்டார்.

இவருக்கு எதிராக பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் ஒருங்கிணைந்து பல போராட்டங்களை நடத்தியும், முதன்மைக் கல்வி அலுவலர் அதை சிறிதும் பொருட்படுத்திக் கொள்வில்லை. கடந்த வாரம் கூட, பிளஸ்2 மாணவ- மாணவியருக்கு கணிதம் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களை மட்டும் அழைத்து, கணித பாடத்தில் அனைத்து மாணவ- மாணவியரும் தேர்ச்சி பெற கற்பித்தல் பணியை மேம்படுத்தவேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்நிலையில், அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது கல்வியாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : start ,Namakkal ,election ,Plus 2 ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...