தர்மபுரியில் அடுத்தடுத்து 2 குழந்தைகள் மர்மச்சாவு

தர்மபுரி, பிப்.12: மகேந்திரமங்கலம் பிச்சாண்டஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவரது 13 நாள் பெண் குழந்தைக்கு, உடல்நிலை சரியில்லாமல் நேற்று முன்தினம், தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திடீரென குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம் ஆனந்தாஸ்ரமம் என்ற ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் இருந்த 5 மாத குழந்தை அவுத்திரிகாவுக்கு, உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேற்று முன்தினம் இரவு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்தனர். இங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். குழந்தை எதனால் இறந்தது என தெரியவில்லை. இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>