×

காட்டேரி அணையில் ஆகாயதாமரை தண்ணீர் மாசுபடும் அபாயம்

ஊட்டி, பிப். 12:ஊட்டி அருகேயுள்ள காட்டேரி அணையில் ஆகாய தாமரை ஆக்கிரமிக்க துவங்கியுள்ளதால், அணை மாசுப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஊட்டி அருகே காட்டேரி கிராமம் பகுதியில் அணை ஒன்று உள்ளது. இந்த அணை அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை கட்டுப்பாட்டில் உள்ளது. வெடிமருந்துகள் தயாரிக்க தேவையான தண்ணீர் இங்கிருந்தே கொண்டு செல்லப்படுகிறது. மேலும், காட்டேரி பகுதியில் உள்ள விவசாயிகளும் இந்த தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த அணையில் தற்போது ஆகாய தாமரை ஆக்கிரமிக்க துவங்கியுள்ளது. அணையில் ஆகாய தாமரை ஆக்கிரமித்து வருவதால், அணையில் உள்ள தண்ணீர் மாசடைவதுமட்டுமின்றி அணை முழுவதும் ஆக்கிரமிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, காட்டேரி அணையை ஆக்கிரமித்து வரும் ஆகாய தாமரையை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Vampire Dam ,
× RELATED நிரம்பி வழியும் காட்டேரி அணை...