×

ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி 1 டன் பறிமுதல்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மற்றும் கத்திவாக்கம் ரயில் நிலையங்களில் இருந்து ரேஷன் அரிசியை ரயில் மூலம் ஆந்திராவுக்கு கடத்திச் செல்லப்படுவதாக திருவொற்றியூர் மண்டல உணவு பொருள் வழங்கல்துறை உதவி கமிஷனர் சுந்தருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து திருவொற்றியூர் உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் திருவொற்றியூர் மற்றும் கத்திவாக்கம் ரயில் நிலையங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது  அதிகாரிகளை கண்டதும் ஆந்திராவுக்கு கடத்திச் செல்வதற்காக கொண்டு வந்திருந்த அரிசி மூட்டைகளை ரயில்வே நடைமேடைகளில் போட்டு விட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடினர். இதனையடுத்து ரயில் நிலையங்களில் கிடந்த ஒரு டன் எடையுள்ள ரேஷன் அரிசியை மீட்டு திருவொற்றியூர் மண்டல உணவு பொருள் வழங்கல் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் ரேஷன் அரிசி கடத்த முயன்று தப்பி ஓடியவர்கள் மீது போலீசில் புகார் செய்தனர்.

Tags : Andhra Pradesh ,
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி