×

வடசென்னை பகுதிகளில் அதிமுக அமைச்சரை விமர்சித்து போஸ்டர் : போலீசில் புகார்

சென்னை: சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முஸ்லிம்களை விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடசென்னையில் வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை ஆகிய பகுதிகளில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டிப்பட்டது. அந்த போஸ்டரில் தமுமுக என அச்சிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், கொருக்குப்பேட்டை சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்த தமுமுக ஆர்.கே.நகர் பகுதி செயலாளர் அப்துல்காதர் (32) என்பவர், ஆர்.கே.நகர் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதில், “தமுமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநில பொதுச்செயலாளர் உள்ளிட்ட 2 பேர் தூண்டுதலின் பேரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

இதற்கும் தமுமுகவிற்கும் எந்த தொடர்பும் கிடையாது. எனவே, தமுமுக மீது பழிபோடும் வகையில் செயல்படும் இந்த இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதேபோல், வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை காவல் நிலையங்களிலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

Tags : minister ,AIADMK ,North Chennai ,
× RELATED 18ம் தேதிக்கு பிறகு வெளிமாநில பதிவெண்...