×

டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரத்தை நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரிக்க வேண்டும்

கோவை, பிப்.11: ‘‘தமிழ்நாடு தேர்வாணய முறைகேடு விவகாரம் குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரிக்க வேண்டும்,’’ என சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார். கோவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது: சி.ஏ.ஏ எதிர்ப்பு உள்ளிட்ட போராட்டங்களுக்கு  காவல் துறையின் அனுமதி மறுக்கப்படுகிறது.  ஆனால் நடத்திக் கொள்ள வாய்மொழியாக அனுமதி கொடுத்து விட்டு பின்னர் வழக்கு போடுகின்றனர். சமீபத்தில் தென்காசியில் பொதுக்கூட்டம் நடத்த கூடாது என அனுமதி மறுத்து விட்டு, வாய்மொழியாக   நடத்திக்கொள்ளுங்கள் என காவல் துறை சொல்கிறது. அரசியல் அமைப்பு சட்டம் கொடுத்துள்ள கருத்துரிமை காவல் துறையால்  மறுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஜனநாயகம் இருக்கின்றதா இல்லையா என்ற சந்தேகம் எழுகின்றது.டெல்டா மாவட்டங்களை வேளாண் பாதுகாப்பு  மண்டலமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். வேளாண் பாதுகாப்பு  மண்டலம்  காலம் கடந்து அறிவித்து இருந்தாலும் கூட அதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கின்றது.

வேளாண் பாதுகாப்பு மண்டலத்தை அமைக்க சட்டரீதியாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிய விரும்புகிறேன். ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்த மத்திய அரசு பல நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. மத்திய அரசு வழங்கியுள்ள அந்த  அனுமதி ரத்து செய்யப்படுமா  என்பதை முதல்வர் விளக்கவேண்டும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில்  தீர்மானம் நிறைவேற்ற திமுக சட்டபேரவை தலைவரிடம் வலியுறுத்தியுள்ளோம். வரும் 14ம் தேதி நடைபெறும் சட்டமன்ற கூட்ட தொடரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக கொடுத்த தீர்மானத்தை விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத  பகுதிகளிலும், நகர் புற உள்ளாட்சி தேர்தல்களும்  நடத்தப்பட வேண்டும். டி.என்.பி.எஸ்.சி விவகாரத்தில் உயர் பொறுப்பில், அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு தொடர்புண்டு. சுண்டெலிகள் மட்டும் சிக்கியுள்ளது, பெருச்சாளிகள் சிக்கவில்லை. இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை நடத்தவேண்டும்பணம் இருந்தால் வேலை வாங்கலாம் என்பதை இந்த முறைகேடு காட்டியிருக்கிறது. சம்மந்தப்பட்ட அரசியல்வாதி, அமைச்சர்கள் யார் இதில் தொடர்பில் உள்ளனர் என்பதை விசாரிக்க நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரிக்க வேண்டும். காவல் துறையில் நடைபெற்றுள்ள  ஊழலிலும் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள், அமைச்சர்கள் தொடர்பு உள்ளது. எஸ்.சி, எஸ்.டி பதவி உயர்வு இடஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பு கவலைக்குரியது. சமூக நீதிக்கு எதிரானது. நாடாளுமன்றம் இதில் தலையிட வேண்டும், சமூக நீதி மறுக்கப்பட கூடாது.

பா.ஜ.க, சொல்வதை கேட்காதவர்களை அச்சுறுத்த வருமானத்துறையை பயன்படுத்தி வருகிறது வட்டிக்கு கொடுக்க அனுமதி பெறவேண்டும். அதை நடிகர்  ரஜினி பெற்று இருக்கிறாரா? அதை ரஜினியும் விளக்க வேண்டும். மாநில அரசும் விளக்க வேண்டும். 77 கோடி பணம், 300 கோடி ஆவணங்கள் அன்புசெழியனிடம் இருந்து கைப்பற்றபட்டதாக  சொல்கின்றனர். அன்புசெழியனிடம் இருக்கும் பணம் குறித்து வருமான வரித்துறை ஏன் விசாரிக்க வில்லை.

Tags : CBI ,DNPSC ,
× RELATED யூடியூபர் சங்கர் வழக்கு விவகாரம்;...