×

மமக சார்பில் குடியுரிமை பாதுகாப்பு பொதுக்கூட்டம்

சேலம், பிப்.7:  சேலம் கிழக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில், இன்று மாலை 5 மணிக்கு, ஜாகிர் அம்மாபாளையம் மெயின்ரோட்டில், குடியுரிமை பாதுகாப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, மதிமுக மாநில துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, தேசிய காங்கிரஸ் கட்சி செயலாளர் வாழப்பாடி ராமசுகந்தன், மமக மாநில அமைப்பு  செயலாளர் ஜைனுல் ஆபிதீன், சேலம ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி அன்வர், முன்னாள் முத்தவல்லி அமான்(எ) நாசர்கான் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். எனவே, இந்த பொதுக்கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என மமக மாவட்ட தலைவர் ஷேக்முகமது கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags : Citizenship Security Forum ,Mamaka ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயகத்தை...