×

வேப்பந்தட்டை சார்பதிவாளரை கண்டித்து முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகம் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், பிப். 7: பெரம்லூரில் வேப்பந்தட்டை சார் பதிவாளர் பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தை பத்திரப்பதிவு செய்ய லஞ்சம் கேட்கும் நடவடிக்கையை கண்டித்து, முஸ்லீம்உரிமை பாதுகாப்புக் கழகம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, பெரியம்மாபாளையம் பகுதியில் ஜாமியா பள்ளி வாசலுக்குச் சொந்தமான நிலத்தை கிரைய ஆவணம் செய்ய லஞ்சம் கேட்டுத் தராததால், தாக்கல் செய்யப்பட்ட பத்திரத்தை பதிவு செய்யாமல், வேண்டுமென்றே நிலுவை யில் வைத்து, அலைக்கழிக்கின்ற வேப்பந்தட்டை சார்பதிவாளர் மீதும், சென்னை பதிவுத்துறை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட 118 புகார் மனுக்கள் மீது விசாரணை செய்யாமல் காலம் தாழ்த்தி லஞ்சத்தை ஊக்குவிக்கின்ற, மாவட்டப் பதிவாளர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரியும், உடனடியாக பத்திரத்தை பதிவு செய்துதரக் கோரியும் பெரம்பலூரில் நேற்று முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழகம் சார்பாக பழைய பஸ் ஸ்டாண்டு காந்திசிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முஸ்லீம் உரிமைப் பாதுகாப்புக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் தலைமை வகித்தார். பெரம்பலூர் மாவட்ட செயலாளர் அப் துல் சமது, திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் ரபிக் ராஜா, துணை செயலாளர் முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்புச் செயலாளர் குழுமூர் முகமதுஅலி, மாநில இளைஞரணி தலைவர் நஜிருதீன், திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் ஜாகிர்உசேன், அமிருதீன், உமர் கத்தாப், அப்துல்மாலிக், அப்துல்கனி, அப்துல் ரகுமான், ராஜ்முகம்மது உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.


Tags : protest ,Muslim Rights Council ,Veppandattu Defender ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...