×

முள்ளிக்குளம் முத்துமாரியம்மன் ேகாயிலில் வருஷாபிஷேக விழா

புளியங்குடி, பிப். 7:  முள்ளிக்குளம் முத்துமாரியம்மன் ேகாயில் வருஷாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. முள்ளிக்குளம் கீழத்தெரு யாதவர் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன் ேகாயிலில் 10ம் ஆண்டு வருஷாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. விழாவில் கணபதி ஹோமம், கும்பபூஜை, பூர்ணாகுதி நடந்தது. தொடர்ந்து கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி அபிஷேகம் நடந்தது.  முத்துமாரியம்மன் மற்றும் பரிவார ேதவதைகளுக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. மதியம் அன்னதானம் நடந்தது. இரவு 9 மணிக்கு அம்மன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் தி.பாலசுப்பிரமணியம், மா. பாலசுப்பிரமணியன் செய்திருந்தனர்.

Tags : Mullikkulam Muthumariamman Mayil Annual Celebration ,
× RELATED கோடைமழை காரணமாக திருக்குறுங்குடியில் விவசாய பணிகள் மும்முரம்