×

நர்ஸ் பிடியில் உள்ள கணவனை மீட்க கோரி காவல் நிலையத்தில் மனைவி தர்ணா

சென்னை, பிப். 7: நர்சின் பிடியில் உள்ள கணவனை மீட்டுத்தர வேண்டும் என்று காவல் நிலையத்தில் மனைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் புளியந்தோப்பில் பரபரப்பை ஏற்படுத்தியது.புளியந்தோப்பு, 3வது தெருவை சேர்ந்தவர் ரபீக்பாஷா (30). இவர், சென்ட்ரல் அருகே உள்ள அல்லிக்குளம் பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஆயிஷா பர்வீன் (25). இவர்களுக்கு கடந்த 8 வருடத்துக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை ஆயிஷா பர்வீன், புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், ‘தனது கணவனுக்கும், நர்ஸ் வேலை செய்து வரும் ரேஷ்மா பேகத்துக்கும் ரகசிய தொடர்பு உள்ளது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி, நர்ஸ் பிடியில் இருந்து எனது கணவனை மீட்டுத்தர நடவடிக்கை எடுக் கவேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

இதன் அடிப்படையில், நேற்று முன்தினம் மாலை இருதரப்பினரையும் போலீசார் அழைத்து விசாரித்தனர். அப்போது, ரபீக்பாஷா மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை, என கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த ஆயிஷா பர்வீன், புளியந்தோப்பு காவல்நிலையம் முன்பு உறவினர்கள் 5 பேருடன் தர்ணாவில் ஈடுபட்டார். போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், ‘‘உங்கள் பிரச்னை தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று உறுதியளித்துள்ளனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : Wife Darna ,recovery ,police station ,nurse ,
× RELATED கூலித்தொழிலாளி சடலம் மீட்பு