×

இலுப்பூரில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து திமுக கையெழுத்து இயக்கம்

இலுப்பூர், பிப். 6: அன்னவாசல் ஒன்றிய திமுக சார்பில் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக்கோரி இலுப்பூர் கடைவீதியில் கையெழுத்து இயக்கம் நடந்தது. குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டும். தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணியை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இலுப்பூர் கடைவீதியில் அன்னவாசல் ஒன்றிய திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் துவங்கியது. புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொருப்பாளர் செல்லபாண்டியன், அன்னவாசல் வடக்கு ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் பழனியப்பன், குண்றாண்டார்கோயில் ஒன்றிய சேர்மன் போஸ், இலுப்பூர் நகர செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : DMK Signature Movement Against Citizenship Law In Iluppur ,
× RELATED திருமயம் பகுதியில் மக்களுக்கு தொல்லை...