×

தேனியில் செலவில்லா முறையில் கல்வி கற்பித்தல் கண்காட்சி

தேனி, பிப். 6: செலவில்லா முறையில் கல்வி கற்பிக்கும் முறைகள் குறித்த கண்காட்சி தேனியில் நடந்தது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டமான சமக்ரா சிக்ஷா மற்றும் அரவிந்தா சொசைட்டி இணைந்து நாடு முழுவதும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நிதி முதலீடு இல்லாமல் புதிய முறையில் கல்வியினை கற்பிக்கும் முறையினை செயல்படுத்தி வருகிறது. இதன்படி, தமிழகத்தில் தேனி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி, கடந்த நவம்பர் மாதம் தேனி மாவட்டத்தை சேர்ந்த தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியை தொடர்ந்து பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்ததில் பள்ளி ஆசிரியர்கள் பாடம் நடத்தும் முறை, பாடம் நடத்துவதற்கு கையாளும் விதம் ஆகியவை குறித்து அறிக்கையாக பெற்றனர். இதனையடுத்து தேனி மாவட்டத்தில் சிறந்த முறையில் கல்வி கற்கும் 436 பள்ளி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களின் கல்வி கற்பிக்கும் முறை குறித்த கண்காட்சி தேனி கம்மவார் சங்க கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் 436 ஆசிரியர்கள் அளித்த கல்வி கற்பிக்கும் முறை குறித்து கண்காட்சியில் விளக்கப் படங்கள் வைக்கப்பட்டன. இதனை தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆசிரியர் பயிற்சி மாணவ, மாணவியர்கள், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் வந்து பார்த்தனர்.

Tags : Exhibition ,Honey Bee ,
× RELATED உதகை மலர் கண்காட்சி தொடங்கியது : சுற்றுலா பயணிகள் பிரமிப்பு!!