×

கழுகுமலை கோயிலில் தைப்பூச திருவிழா வெள்ளி யானையில் சுவாமி வீதியுலா

கழுகுமலை, பிப் 4: கழுகுமலை கோயில் தைப்பூச திருவிழாவில் வெள்ளி யானையில் கழுகாசலமூர்த்தி, வள்ளி -தெய்வானையுடன் வீதியுலா வந்தார். கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் கடந்த  30ம் தேதி தைப்பூச திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது. 4ம் நாளன்று அதிகாலை 5 மணிக்கு  நடை திறக்கப்பட்டு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 6 மணிக்கு மேல் திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காலசந்தி பூஜை நடந்தது. இரவு 8 மணிக்கு மேல் வெள்ளி யானையில் கழுகாசலமூர்த்தி, வள்ளி -தெய்வானையும் ரதவீதியுலா வந்தார். தொடர்ந்து செங்குந்தர் சமுதாய மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் செங்குந்தர் சமுதாய தலைவர் வேலு, செயலாளர் தங்கராஜ், பொருளாளர் முப்பிடாதி, கவுரவ ஆலோசகர் சண்முகம் மற்றும் பக்தர்கள் திரளானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : Swamiji Veeduila ,festival ,Taipusa ,
× RELATED மதுரை அழகர்கோயில் ஆடித்திருவிழா ஜூலை 13இல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!